கேரளா:
ஆன்லைனிலா... இப்படி செய்வதும் சரியா... முறையா என்று கேரளா மக்கள் ஸ்தம்பித்து போய் உள்ளனர்.


கேரளாவில் பூரண மதுவிலக்கு என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் கூட முடியலை. அதற்குள் ஆன்-லைன் மூலம் மதுவிற்பனை என்ற புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.


கேரளாவை ஆண்ட முந்தைய காங்கிரஸ் அரசு, 10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு என்ற நோக்கில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தியது.


இதன் ஒருபகுதியாக பிராந்தி உட்பட ஆல்கஹால் நிறைந்த மதுபானங்களின் விற்பனை கைவிடப்பட்டு பீர், ஒயின் மட்டுமே பார்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் மதுவிலக்கு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் இடதுசாரிகள் தலைமையிலான புதிய அரசு, ஆன்லைன் மூலம் மது விற்பனை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதான் மதுவிலக்கா...


மதுபான விற்பனை நிலையங்களை நடத்திவரும் ‘கன்ஸ்யூமர் பெட்” என்ற கூட்டுறவு அமைப்பு தலைவர் மெகபூப், கோழிக்கோட்டில் பேசியபோது இதனை தெரிவித்தார். இதுதான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 


கேரள அரசின் ஆன்-லைன் மூலம் மதுவிற்பனை திட்டத்திற்கு, காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


మరింత సమాచారం తెలుసుకోండి: