சூர்யா நடித்து வரும் 'எஸ்-3' திரைப்படத்தில், அனுஷ்கா சூர்யாவின் மனைவியாக நடிக்கிறார். நடிகை ஸ்ருதி ஹாசன், அவரின் உதவியாளராக நடித்து வருகிறார். இதை நாம் முன்பே அறிந்தோம். 


இதே போல் தற்போது ஸ்ருதி ஹாசனின் தங்கை அக்ஷராவும் இதுமாதிரியான ரோலில் தான் நடிக்கிறாராம். சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கும் 57-வது திரைப்படத்தில், அவர் சர்வதேச உளவாளியாக நடித்து வருகிறார். இதில் அக்ஷரா, அஜித்தின் உதவியாளராக நடித்து வருகிறாராம்.


அக்காவை பின்பற்றும் வகையில் நடித்து வரும் அக்ஷராவிற்கு, தமிழ் சினிமா நல்ல எதிர்காலத்தை அளிக்குமா இல்லை வீட்டுக்கு அனுப்பிவிடுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: