சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கபாலி' திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியானது. பல நாட்களாக இந்த படத்தை காண, காத்திருந்த ரசிகர்கள் நேற்று நள்ளிரவே திரையரங்குகளில் குவிந்து காணப்பட்டனர்.
ரஜினியின் கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வது, பட்டாசு வெடிப்பது என 'கபாலி' திரைப்படத்தை ரசிகர்கள் வரவேற்கத் தொடங்கினர்.
இந்நிலையில் ரசிகர்களை போல கோலிவுட் நட்சத்திரங்களும், 'கபாலி' திரைப்படத்தை அதிகாலை முதல் சோவில் கண்டு களித்துள்ளனர். நடிகர் தனுஷ், சித்தார்த், அனிருத், விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கபாலி திரைப்படத்தை, கிரோம்பேட்டையிலுள்ள 'வெற்றி' திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளனர்.

அதே போல மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் அவரது மகன் காளிதாஸ், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் 'காசி' திரையரங்களில், கபாலி பாடத்தை பார்த்துள்ளனர்.