கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார். 1999ம் ஆண்டு இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் முற்றிக்கையிட்டது. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போர் கடுமையாக நடைபெற்றது.

இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்காக இந்திய வீரர்கள் பலர் தங்களது இன்னுயிரை மண்ணுக்காக தியாகம் செய்தனர். கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களின் உயிர் தியாகத்தை நினைவு கூறும்வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 27ம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் என்று அரசால் கடைபிடிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து டெல்லி உட்பட நாடு முழுவதும் பல இடங்களில் உயிரிழந்த மண்ணின்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
click and follow Indiaherald WhatsApp channel