மக்களவை தேர்தல் நடந்தபோது தமிழகத்தில் வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வேலூர் தொகுதி திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த்க்கு சொந்தமான இடங்களில் பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து தலைமை தேர்தல் ஆணையம், வேலூர் தேர்தலை ரத்து செய்தது.

இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதி தேர்தல் ஆகஸ்ட் 5-ம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் தொகுதியில் 11ஆம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 18 என்றும் அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், ஆகஸ்ட் 5 பதிவு செய்யப்படும் வாக்குகள் ஆகஸ்ட் 9 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel