மாஸ்கோ:
டோட்டலாக தடை... தடைதான் என்று முடிவெடுத்து இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளன. யாருக்கு தடை தெரியுங்களா?
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஒட்டுமொத்த ரஷ்ய அணிக்கும் தடை விதிக்க சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் முடிவு செய்துள்ளதாம்.
காரணம் ரஷ்ய வீரர், வீராங்கனைகளின் ஊக்க மருந்து விவகாரத்தில் அந்நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் நேரடியாக தொடர்பு இருப்பதால்தான் இந்த அதிரடி முடிவை ஒலிம்பிக் சம்மேளனம் முடிவு செஞ்சு இருக்காம். இதனால் 387 வீரர், வீராங்கனைகளுக்கும் ரியோ போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
ஒட்டுமொத்த விளையாட்டுத்துறையையும் களங்கப்படும் வகையிலான இந்த செயலை கடுமையாக தண்டிக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2012ல் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பல வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரஷ்ய விளையாட்டுத்துறை அமைச்சகமே ஊக்க மருந்துகளைக் கலந்து கொடுத்த கேடு கெட்ட செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ரியோ ஒலிம்பிக் மட்டுமல்லாமல் 2018ல் தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொள்ள ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்படவுள்ளதாம். ஆனால் தவறு செய்யாத, திறமையான ரஷ்ய வீரர்கள், வீராங்கனைகளும் இதில் பாதித்தால் என்ன செய்வது. அதை யோசித்து அவர்களை மட்டும் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கலாமா என்று யோசனையில் உள்ளதாம் ஒலிம்பிக் சம்மேளனம்.