பெங்களூரு:
தண்ணீர் திறந்து விட்டதை அடுத்து கர்நாடகாவில் நடந்து வரும் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு அங்கு வசிக்கும் தமிழர்கள் ஆதரவு தர வேண்டும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாம். இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. 


கன்னட அமைப்புகள் பேரணி, மறியல் மற்றும் உருவ பொம்மை எரிப்பு என்று போராட்டங்கள் நடத்திடி வரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து கர்நாடகா செல்ல வேண்டிய வாகனங்கள், தமிழக எல்லைலேயே போலீசார் நிறுத்தி வருகின்றனர்.


எந்த வாகனத்தையும் அதற்கு மேல் அனுமதிக்கவில்லை. கர்நாடகாவிலிருந்து எந்த வாகனமும் தமிழகத்திற்குள் வரவில்லை. தமிழகத்திற்குள் வர வேண்டிய ஒரு சில லாரிகள் மாற்றுப்பாதையில் வருகின்றன.


கர்நாடகாவில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தமிழக சேனல்கள் ஒளிபரப்பை கேபிள் டிவி சங்கங்கள் நிறுத்தி வைத்துள்ளன. இதுமட்டுமின்றி இந்த போராட்டங்களுக்கு கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் ஆதரவு தர வேண்டும் என்று மிரட்டப்படுகின்றனர். அப்படி ஆதரவு தரவில்லை என்றால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்றும் மறைமுகமாக எச்சரிக்கப்படுவதால் கர்நாடக தமிழர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: