ஜமைக்கா:
இந்திய பவுலர்கள் அசத்தல் ஆட்டத்தை கண்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்த நேரத்தில் இடையில் புகுந்து ஆட்டத்தை கலைத்துவிட்டார் வருண பகவான். மழையால் ஆட்டம் முன்னதாகவே முடிந்தது.


வெஸ்ட் இண்டீஸ், இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் ஜமைக்காவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 196, இந்தியா 500/9 ('டிக்ளேர்') ரன்கள் எடுத்தன. நேற்று நான்காவது நாள் ஆட்டம் மழையால் அடிக்கடி தடைபட்டது.


பின்னர் 2வது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் இஷாந்த். அவரது 'வேகத்தில்' சந்திரிகா (1) போல்டானார். அடுத்து பிராத்வைட் (23), அமித் மிஸ்ரா 'சுழலில்' சிக்கினார். முகமது ஷமியிடம், சாமுவேல்ஸ் (0), டேரன் பிராவோ (20) சிக்கினர்.


வெஸ்ட் இண்டீஸ் அணி உணவு இடைவேளையின் போது இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்து, 256 ரன்கள் பின்தங்க, இந்திய பவுலர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. பின்னர் கனமழை பெய்ததால் வெறும் 15.5 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில், 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.


வானிலை ஒத்துழைக்கும் பட்சத்தில் எஞ்சிய 6 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி 2வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறலாம். இதுவும் ஒரு வரலாற்று பதிவாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: