நியூயார்க்:
நேரம் தவறாத இவர் முதல் முறையாக தாமதமாக வந்ததை ஆச்சரியமாக பார்க்கின்றனர் அமெரிக்கர்கள்.


என்ன விஷயம் என்றால்... நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.பொது சபை கூட்டத்திற்கு அமெரிக்க அதிபர் பாரக் தாமதமாக வந்ததுதான் அந்த மேட்டர்.


தொடக்க நாளன்று பிரேசிலுக்கு அடுத்தடியாக அமெரிக்க அதிபர் 2-வதாக பேச வேண்டும். ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமா கூட்டம் தொடங்கிய பிறகு தாமதமாக வந்தார். அதனால் அவர் பிரேசிலுக்கு அடுத்தபடியாக பேச முடியவில்லை. 


இவர் எப்போதும் தாமதமாக வந்ததே இல்லை என்று சொல்கின்றனர். இவர் வராததால் சாட் நாட்டு பிரதிநிதியை 2-வதாக பேசும்படி ஐ.நா.சபை தலைவர் அழைத்தார். அதன் மூலம் இவர் ஐ.நா. சபை வரலாற்றில், 2-வதாக பேசும் மரபை இழந்த அமெரிக்க அதிபர் என்ற பேச்சுக்கு உள்ளாகி உள்ளார் ஒபாமா! பதவிக்காலம் முடியும் நேரத்தில் இப்படியா!


Find out more: