சென்னை:
நினைத்ததை சாதிக்க தடைகள் எவ்வளவு வந்தாலும் உறுதி கொண்ட மனதிற்கு முன்பு அது எம்மாத்திரம் என்று நிரூபித்துள்ளார் இவர்.


யார் தெரியுங்களா? இசையமைப்பாளர் ஜிப்ரான்தான். இவர் இசையமைக்கும் சென்னை டு சிங்கப்பூர் படத்தின் 6 பாடல்களை 6 நாடுகளில் வெளியிட திட்டமிட்டார். 


போட்ட திட்டப்படி 2 பாடல்களை வெற்றிகரமாக வெளியிட்ட ஜிப்ரானுக்கு... இயற்கை தடையாக வந்து நின்றது.


மூன்றாவது பாடலை வெளியிட மியான்மருக்கு சென்றவர் பூகம்பத்தால் திகைத்து நின்றார். ஜிப்ரான் குழுவினர் மியான்மருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது பூகம்பம் வந்ததால் அங்கேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 


பூகம்பம் தடைபோட்டாலும் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளாமல் மாற்று பாதையில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்துள்ளார் ஜிப்ரான். முன்னேறுங்கள்... தடைக்கற்கள்தான் நமக்கு படிக்கற்கள்.



మరింత సమాచారం తెలుసుకోండి: