சென்னை:
தமிழ் திரையுலம் கொஞ்சம் கொஞ்சமாக ஹாலிவுட் ரேஞ்சிற்கு மாற்றம் பெற்று வருகிறது என்று கோடம்பாக்கத்து குருவிகள் முடிந்த மட்டும் குரல் கொடுக்கின்றன. என்ன விஷயம்ன்னா?


விக்ரம் நடிப்பில் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் உள்ள இருமுகன் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை கிளப்பி உள்ளது. இப்படத்தின் டீசர் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த படத்தில் இரண்டு விக்ரமா? இல்லை ஒருவரே தான் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் வருகிறாரா? என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளது படக்குழு. அதுமட்டுமா... இது சயின்ஸ் பிக்சன் கதை... என்று... இல்லை திரில்லர் வித் சயின்ஸ் பிக்சன் என்று வதந்திகள் உலா வருகிறது.


சூர்யா நடித்த 24 படம் கூட சயின்ஸ்-பிக்‌ஷன் கதையம்சம் கொண்டது. இதேபோல் நேற்று இன்று நாளை படமும் சயின்ஸ பிக்ஷன் கதைதான். இப்படி ஹாலிவுட் ரேஞ்சிற்கு தன்னை மாற்றம் செய்து வருகிறதாம் கோலிவுட். அவங்க ரேஞ்சிற்கு இல்லாட்டாலும் நம்ம ரசிகர்களை திருப்தி படுத்தினால் படம் ஹிட்டுதானே!


Find out more: