சென்னை:
எப்படி? எப்படி? இது நடந்தது எப்படின்னு கோலிவுட் வாயை பிளந்த கதையின் பின்னணி இதுதானாம்!


விஷால் படம் என்றாலே இப்போ குடும்பத்தோட போய் பார்க்கலாம் என்ற பெயரை வாங்கிடுச்சு. காரணம் அந்தளவிற்கு கண்ணியமாக இருக்கிறது. இவரும் பண்டிகைகளை குறிவைச்சு தன் படத்தின் ரிலீசை வைத்துக் கொள்கிறார். அதுபோல இப்போ தீபாவளிக்கு வரபோகுதாம் கத்திச்சண்டை படம்.


சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடித்துள்ள இந்த படத்தின் மூலம் மீண்டும் காமெடி ட்ராக்கில் கலக்க வருகிறார் வடிவேலு. ஆனால் சூரியும் இருக்கிறாரே! ஒரே உறையில் 2 கத்திகளா என்று ரசிகர்கள் சந்தேகப்பட அதுக்கு பதிலளித்துள்ளார் இயக்குனர் சுராஜ்.


முதல் பாதி முழுவதும் விஷாலுடன் வருவார் சூரி, அதே போல் இரண்டாம் பாதி முழுவதும் டாக்டர் புத்ரி என்ற கதாபாத்திரத்தில் சரவெடியாக கலக்கியுள்ளாராம் வடிவேலு.



அப்போ... ஒரு படத்தை சரிபாதியா பிரிச்சு கொடுத்துட்டீங்க ஜமாய்ங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: