சென்னை:
என்னங்க சார்... இப்படி சொல்லிட்டீங்க... சொல்லிட்டீங்க என்று நொந்து போய் உள்ளனர் ரசிகர்கள். என்ன விஷயம் என்று கேட்கிறீர்களா?


பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு நேற்று பிறந்த நாள். தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் எடுத்து சென்றவர். இவர் இயக்கத்தில் சுமார் ரூ 350 கோடி பட்ஜெட்டில் 2.0 தயாராகி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. கபாலி போட்ட போடு இந்த படத்திற்கும் செம எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அடுத்த மாதம் வருகிறது. தீபாவளிக்கு டீசர் என்று வெளியான தகவல் ரசிகர்களை ரொம்பவே உற்சாகப்படுத்தியது. இந்நிலையில் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு, பர்ஸ்ட் லுக்கே நவம்பர் மாதம் தான் வரும் என படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். நவம்பருக்குதான் பர்ஸ்ட் லுக்கே என்றால் அப்போ டீசர்?.


ஏன் என்னாச்சு என்று ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர். சீக்கிரம் ரிலீஸ் செய்யுங்கப்பா...


మరింత సమాచారం తెలుసుకోండి: