குக்கூ திரைப்படத்திற்கு பிறகு ராஜு முருகன் இயக்கியுள்ள 'ஜோக்கர்' திரைப்படம் அண்மையில் வெளிவந்தது. இந்த படம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தெளிவாக எடுத்து காட்டும் வகையில் தோன்றியுள்ளது.
திரையரங்கில் நல்ல வரவேற்பு பெற்று, அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வரும் இந்த திரைப்படத்தை, அரசியல் தலைவர்களான தி.க.வீரமணி, கம்யூனிஸ்ட் கட்சி திரு. நல்ல கண்ணு மற்றும் ஊழலை எதிர்த்து போராடும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் உள்ளிட்டோர் பார்த்துவிட்டு இயக்குனர் ராஜூமுருகனையும், படக்குழுவினரையும் பாராட்டியுள்ளனர்.
இந்த சமூகத்தில் அனைவரும் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும். இந்திய நாட்டில் அனைத்து தரப்பினரும் படும் துயரத்தை இயக்குனர் அப்படியே எடுத்து காட்டியுள்ளார். தமிழ் சமூகம் ஆதரிக்க வேண்டிய ஒரு படைப்பு என்று கூறி பாராட்டியுள்ளனர். மேலும் இயக்குனர் லிங்குசாமியும் பாராட்டியுள்ளார். இது இந்த படத்திற்கு மேலும் ஒரு கவுரவமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.