பிரபல நடிகை சினேகா, சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். மலையாள நடிகர் மம்மூட்டிக்கு மனைவியாக ஒரு படத்தில், தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் சினேகா, தனது கணவர் பிரசன்னாவிற்கு படவாய்ப்புகள் அளிக்க சொல்லி, சிலரிடம் சிபாரிசு செய்துள்ளார். இதன் விளைவு தான் தற்போது பிரசன்னா, தனுஷ் இயக்கும் 'பவர் பாண்டி' மற்றும் மிஸ்கின் இயக்கவுள்ள 'துப்பறிவாளன்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க தேர்வாகியுள்ளாராம்.
எவ்வளவு நாள் தான் படவாய்ப்புகள் இல்லாமல், வீட்டிலே சும்மா இருப்பார் பிரசன்னா, அவருக்கு ஏதாவது படவாய்ப்பு இருந்தால் கொடுங்கள் என்று சினேகா, சில முன்னணி நட்சத்திரங்களிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.