சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்திற்காக கீர்த்தி சுரேஷ் சாவித்திரி அளவிற்கு வெயிட் போட உள்ளாராம்.நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு மகாநதி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தற்சமயம் படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.நாக் அஷ்வின் இயக்கி வரும் மகாநதி படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கியது. கீர்த்தி செட்டில் சாவித்ரி கெட்டப்பில் இருந்த புகைப்படம் வெளியானது.இது பரபரப்பை உண்டாக்கியது. தனது கெரியரின் உச்சத்தில் இருந்தபோது வெயிட் பிரச்சனை ஏற்பட்டு குண்டானார். இருப்பினும் ரசிகர்களுக்கு அவரை பிடித்திருந்தது. இந்நிலையில் கீர்த்தியை வெயிட் போடுமாறு இயக்குனர் தெரிவித்துள்ளாராம்மகாநதி படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

துல்கர் சல்மான் காதல் மன்னன் ஜெமினி கணேசனாக நடிக்கிறார். இந்த படம் மிகவும் வித்தியாசமான கோணமாக இருக்கும் என்று நம்புகிறார் நாக் அஷ்வின்.கீர்த்தி ஏற்கனவே குண்டாக இருப்பதாக நெட்டிசன்கள் சும்மாவே கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவரை வெயிட் போடுமாறு அஷ்வின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
click and follow Indiaherald WhatsApp channel