மாஜி வெற்றி ஹீரோயின் கஸ்தூரி மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதோடு, டுவிட்டரிலும் கடும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் ரஜினி அரசியல் பிரவேசம் தொடங்கி அவ்வப்போது நாட்டு நடப்புகள் பற்றிதனது சூடான செய்திகளை வெளியிட்டு பரபரப்பு வளையத்திற்குள் எப்பொழுதும் நின்று கொண்டிருக்கிறார் கஸ்தூரி.

மேலும், தனது டுவிட்டரில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் கொடுக்கிறார் கஸ்தூரி. அந்தவகையில், சிம்புவின் ஏஏஏ படம் தோல்வி குறித்து ஒரு ரசிகர் அவரிடம் கேள்வி கேட்டதற்கு, அவர் தனது சினிமா தொழிலையே மாற்றும் நிலை உருவாகியிருக்கிறது என்று பதில் கொடுத்துள்ளார். கஸ்தூரியின் இந்த பதிலால் சிம்புவின் ரசிகர்கள் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

click and follow Indiaherald WhatsApp channel