
சென்ற வாரம் உத்தர பிரதேசத்தில் பிரச்சாரத்தில் மோடி ராகுலை நோக்கி உங்கள் தந்தை ராஜீவ் காந்தி நல்லவர் போல காங்கிரஸ் கூறிவருகிறது, மிஸ்டர் கிளீன் என்றெல்லாம் சொல்கிறார்கள் ஆனால் அவர் நம்பர் ஒன் ஊழல்வாதி. ஊழல்வாதியாகவே இறந்தார் என்று மோடி குறிப்பிட்டார். மோடியின் இந்த தரக்குறைவான பேச்சு அனைவரையும் கோபப்படுத்தியது.
இந்நிலையில் அவர் மீண்டும் ராஜீவ் காந்தி குறித்து பேசினார். இன்னும் இரண்டு கட்ட தேர்தல்கள் உள்ளன, நான் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால் நீங்கள் ராஜீவ் காந்தி பெயரை சொல்லி வாக்கு கேளுங்கள். போபர்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், பஞ்சாப்பில் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்த வைத்தவர், போபாலில் விஷ வாயு தாக்குதலில் சமபந்தப்பட்ட வாரன் ஆண்டர்சன் தப்புவதற்கு அவர்தான் காரணம், அவரை வைத்து என்ன செய்ய முடியும் என்று மீண்டும் ராகுலை ராஜீவ் பெயரை வைத்து சீண்டியுள்ளார் மோடி.
click and follow Indiaherald WhatsApp channel