
தொடங்கி நான்கே நாட்கள் ஆன நிலையில் இன்று வரை எதுவும் பெரிதாக பரபரப்பாக நடக்கவில்லையே என்றே நெட்டிசன்கள் மற்றும் தொலைக்காட்சி ரசிகர்கள் எரிச்சலாக உள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஒரு சூடான சம்பவம் நடைபெற்றுள்ளது. பிக் பாஸ் டாஸ்கில் ஒரு பகுதியாக கேப்டன் ஆன நடிகை ஜனனி மீசை வரைந்தபடி ஆன் போல வர, அவர் அருகே நெருங்கி வரும் நடிகை ஐஸ்வர்யா தத்தாவை அழுத்தமாக உதட்டோடு உதடு பதித்து முத்தமிட்டுள்ளார். இது ஒரு டாஸ்கில் ஒரு பகுதி தான் எனினும், காண்பவர் அனைவரையும் இந்த முத்தாக காட்சி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜனனி இதற்கு முன்னர் பல விளம்பரங்களில் நடித்து விட்டு, அவன் இவன் மூலம் நாயகியாக அறிமுகம் ஆகி ,தெகிடி, பாகன், மற்றும் கடைசியாக அதே கண்கள் படத்தில் நடித்தவர் ஆவார். ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் மற்றும் ஆறாது சினம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் ஆவார். இன்றைய லிப்லாக் காட்சி பார்வையாளர்கள் மற்றும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு சென்ற சீஸனின் புகழ் பெற்ற ஒன்றான ஆரவ் மற்றும் ஓவியாவின் மருத்துவ முத்தத்தை நினைவுபடுத்துவதாக அமைந்தது. இந்த முத்தாக காட்சி எபிசோடிலிருந்து பிக் பாஸ் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
click and follow Indiaherald WhatsApp channel