காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை செமையா கிண்டல் செய்து ட்வீட்டியுள்ளார் நடிகை கஸ்தூரி. நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பல நாளாக ஆக்டிவாக உள்ளார். நாட்டு நடப்பு, அரசியல், சினிமா என்று எல்லா வகைப்பட்ட விஷயங்கள் பற்றியும் ட்விட்டரில் தன் கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை இப்போது கிண்டல் செய்துள்ளார். பத்திரமாக இருங்க அமெரிக்கா. இது #NineEleven, இர்மா புயல், தற்போது #RGinUS(அமெரிக்காவில் ராகுல் காந்தி).பார்த்து பத்திரமாக இருங்க என்று ட்வீட்டியுள்ளார் கஸ்தூரி.Stay Strong USA. Its #NineEleven , #HurricaneIrma and now #RGinUS . Stay strong.
— kasturi shankar (@KasthuriShankar) September 12, 2017
ராகுல் காந்தி அமெரிக்காவில் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் மிக அருமையாக உரையாற்றியதாக காங்கிரஸார் பெருமையாக கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி இப்படி ட்வீட்டியுள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel