சென்னை:
சினிமாவில் மட்டும் புரட்சி செய்யாமல் தன் வாழ்க்கையிலும் புரட்சி செய்துள்ளார் இவர்.


யார் தெரியுங்களா? குக்கூ, ஜோக்கர் என்ற 2 படங்கள் வாயிலாக கோலிவுட்டை தன் பக்கம் திருப்பிய ராஜீமுருகன்தான் அவர். 


இவர் திருமணம் செய்துக்கொண்ட ஹேமா சின்ஹா ஏற்கெனவே திருமணமானவர். இவர் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்.


ஹேமா சின்ஹாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது. விவாகரத்து செய்துக்கொண்ட பெண்ணை திருமணம் செய்து அவர் எடுத்த ஜோக்கர் திரைப்படம் போல் தன் வாழ்விலும் புரட்சியை செய்துவிட்டார். 


இது ஒரு காதல் திருமணம். பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இவர்களது திருமணம் மிக எளிமையாக பெசண்ட் நகர் முருகன் கோயிலில் நடந்துள்ளது. 


திருமணத்தில் அவரது நண்பர்கள் மற்றும் எழுத்தாளர்கள், இயக்குனர்கள் பாலா, லிங்குசாமி என மிக முக்கியமான நடபர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.



Find out more: