பநீநகர்:
அவங்க என்னங்க சொல்றது... நாங்க ராணுவத்திற்கு வருகிறோம் என்று காஷ்மீர் இளைஞர்கள் துடிப்புடன் உள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட காஷ்மீர் மாநில பிரிவினைவாதிகள் தூண்டி வரும் நிலையில், அம்மாநில இளைஞர்கள் 500 பேர் ராணுவத்தில் சேர தயாராகி வருகின்றனர்.
பயங்கரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து காஷ்மீரில் பெரிய கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டது ஆனந்த்நாக் மாவட்டம்தான். ஆனால்இ ங்கு நடந்த ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் காஷ்மீரை சேர்ந்த 500 இளைஞர்கள் ஆர்வத்துடனும், துடிப்புடனும் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் ராணுவத்தில் சேர மிகுந்த விருப்பம் கொண்டுள்ளனர்.
இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் 500 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆள் சேர்ப்பு முகாம் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. காஷ்மீர் பல மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரம் இளைஞர்கள் ஆன்லைன் மூலம் ராணுவத்தில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். இந்தளவு இளைஞர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திருப்பது, இணையதள சேவையில் பிரச்னை இல்லாததை காட்டுகிறது" என்றார்.