சென்னை:
எந்த திரையாக இருந்தால் என்ன? திறமை இருந்தால் இருகரம் கூப்பி வரவேற்கும்... அப்படிதான் நடந்துள்ளது இவருக்கும்...


என்ன விஷயம்னா? தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அனைவரையும் கவர்ந்தவர் மகேஸ்வரி. அப்புறம் என்ன வழக்கம் போல சின்னத்திரை சீரியல்களில் இவருக்கென்று ஒரு இடம் கிடைக்க முக்கியமான கதாபாத்திரங்களில் இவர் சின்னத்திரையின் தவிர்க்க இயலாதவர் ஆனார். இப்படி இருந்தால் என்று நினைத்தாரே என்னவே...?


பின்னர் ஒரு சில படங்களில் தலையை காட்டி சென்றார். மீண்டும் முழு கவனமும் சீரியல் மீதுதான் திரும்பியது. இங்கதான் விழுந்தது டுவிஸ்ட்... வெங்கட் பிரபு இயக்கும் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான ரோலில் மகேஸ்வரி நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். இந்த படம் தனக்கு நிலையான இடத்தை கொடுக்க வேண்டும் என்று கொஞ்சும் குரலில் இந்த பொண்ணு வேண்டிக்குதாம்...


Find out more: