சென்னை:
தன் மூன்றாவது படத்திலேயே உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு மாறிவிட்டார் ரஞ்சித். இவர் சொன்ன 2 கதையில் கபாலிதான் ரஜினிக்கு பிடித்து இருந்ததாம். இதை சொன்னதே அவர்தாங்க...
விஷயத்தை பாருங்களேன். அட்டக்கத்தி, மெட்ராஸ் என தரமான படைப்புக்களை கொடுத்தவர் ரஞ்சித். இவர் இயக்கத்தில் கபாலி படம் அடுத்த வாரம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீசாகவுள்ளது. இந்த படம் செய்துள்ள சாதனைகளை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த படத்திற்கு இப்படி ஒரு பிரமாண்டம் கிடைக்கும் என்பது ரஞ்சித்தும் எதிர்பார்க்காத ஒன்றுதான்.
இப்படம் குறித்து ரஞ்சித் கூறுகையில், ‘ரஜினி சாருக்காக நான் இரண்டு விதமான கதைகளை கூறினேன், இதில் ஒன்று கபாலி மற்றொரும் சயின்ஸ்பிக்ஸன் கதை. ஆனால் ரஜினி சாருக்கு கபாலிதான் பிடித்திருந்தது என்று தெரிவித்துள்ளார். ரஜினிக்கே பிடித்ததால்தான் இப்போது ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.
