சென்னை:
அழகிகளோட ஆடி... ஆடி... ஆட்டம் முடிஞ்சுடும்னு பயம் வந்ததால இப்ப நடிக்கிறது செமத்திய ட்ரை பண்ணறாராம் நம்ம ஆர்யா. அதான் 50 யானைகளோட நடிக்க இருக்காரு.

தோல்வி கொடுத்தா உச்ச ஸ்டாரும்... பச்சா ஸ்டாருன்னு நம்ம கோடம்பாக்கத்து ஆளுங்க கண்டுக்க மாட்டாங்க. இதுல ஆர்யா எந்த மூலைக்கு... அதான் மனுசன் கடம்பனுக்காக கண்ணைக் கட்டிக்கிட்டு மலையிலிருந்து குதின்னாலும் குதிப்பார் போல். இந்த படத்துல 50 யானைகளோட நடிக்கணும் டைரக்டர் சொன்னதுக்கு எந்த மறுப்பும் சொல்லல இந்த பிக்கப் பார்ட்டி. ஏன்னா இப்ப ஹிட் ஒன்று கொடுத்தே ஆகணுமே.


‘மஞ்சப்பை’யை இயக்கிய ராகவனோட அடுத்த படம்தான் ‘கடம்பன்’. இதுல ஆர்யா காட்டுவாசியாக நடிக்கிறார். இந்த படத்துக்கான கிளைமாக்ஸ்ட காட்சி தாய்லாந்தில் எடுக்கப்படுகிறது. இதுலதான் இருக்கு ஹைலைட் மேட்டரு. 50 யானைகளோட நடிக்கணும் என்பதால் பயிற்சிக்காக ஆர்யாவும், இயக்குனர் ராகவனும் தாய்லாந்துக்கு பறக்க போறாங்களாம்.


அங்க இருக்கிற யானை பண்ணையில இருந்து 50 யானைகளை தேர்ந்தெடுத்து (ஆடிஷன் வைப்பாங்களோ) அதோட டிரெய்னிங் எடுக்க இருக்காராம் ஆர்யா... செய்ங்க பாஸ்... செய்ங்க...


Find out more: