சென்னை:
சூரியுடன் கூட்டணி போட்டு நகைச்சுவையில் கலக்க உள்ளாராம் மெட்ராஸ் படத்தில் கலக்கிய கலையரசன் என்று தகவல்கள் பரபரக்கின்றன.


மெட்ராஸ் உட்பட பல படங்களில் கலக்கியவர் கலையரசன். மெட்ராசில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. தற்போது வெளியான ராஜாமந்திரி படத்தில் நடிக்க இயக்குனர் அழைத்த போது காமெடி எனக்கு வருமா? கை கொடுக்குமா என்று கவலைப்பட... இப்போ படத்தில் இவருக்கு நல்ல பெயர். 


தற்போது இவர் நடிக்க உள்ள படங்களின் எண்ணிக்கை 4 என்றால் பார்த்துக் கொள்ளுங்க. தற்போது புதிதாக ஜெமினிகணேசனும்-சுருளிராஜனும் என்ற படத்தில் நகைச்சுவை நாயகனாக நடிக்க இருக்காரு கலையரசன். சரி இதுல என்ன என்கிறீர்களா? தற்போது அனைத்து படங்களிலும் சூரி இருக்கார் என்பதுதானே ஹைலைட். அதுபோல இந்த படத்திலும் சூரியுடன் கைகோர்க்கிறார் கலையரசன். அப்ப அள்ளு சில்லு சிதறும்னு சொல்லுங்க நகைச்சுவையில்.


Find out more: