தற்போது ராமகிருஷ்ணன் 'ஒரு கனவு போல' என்ற படத்தில் இரண்டு நாயகர்களில் ஒரு நாயகராக நடிக்கிறார். இன்னொரு நாயகன் 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை' என்ற படத்தில் கவுண்டமணியுடன் நடிக்கும் சவுந்தர்ராஜா. அமலா என்ற புதுமுகம் ஹீரோயின்.


என்.அழகப்பன் ஒளிப்பதிவு செய்கிறார், இ.எஸ்.ராம் இசை அமைக்கிறார், புலவர் புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன் பாடல் எழுதுகிறார்கள். இறைவன் சினி கிரியேஷன் சார்பில் சி.செல்வகுமார் தயாரிக்கிறார். சேரன், தங்கர் பச்சன், சிம்புதேவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வி.சி.விஜய்சங்கர் இயக்குகிறார்.


'லாரி டிரைவராக இருக்கும் ராமகிருஷ்ணனுக்கும், சினிமாவில் பாடகர் ஆக வேண்டும் என்று லட்சியத்துடன் வாழும் சவுந்தர்ராஜனுக்கும் உள்ள நட்பின் வலிமையை சொல்லும் படம் இது. வாழ்க்கையே ஒரு கனவு போல ஆனால் அதில் நாம் வாழ்ந்தே தீர வேண்டும் ஒரு கவிதை போல என்கிற உயரிய யதார்த்த கருத்தை பதிவு செய்யும் படம் இது. கணவன், மனைவி உறவின் உன்னதங்களை உள்ளுக்குள் இருக்கும் நற்பண்புகளை சொல்லும் படம் இது. படப்பிடிப்பு நாகர்கோவில், கன்னியாக்குமரி, ஹைதராபாத், கொடைக்கானல், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்கிறார்’ இயக்குனர் வி.சி.விஜயசங்கர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: