ரோம்:
உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இத்தாலி முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமருமான கார்லோ அசுக்லியோ சியாம்பி (95) காலமானார். அவருக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.


1920-ம் ஆண்டு இத்தாலியில் பிறந்த சியாம்பி 1946-ம் ஆண்டில் வங்கி ஊழியராக தனது பணியை தொடங்கினார். பின்னர் 1993-1994 வரை இத்தாலி நாட்டின் 49-வது பிரதமராக பதவி வகித்தார். இதன்மூலம் பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் இத்தாலி பிரதமர் பதவியை வகித்த பெருமை இவரை சேர்ந்தது. 


இத்தாலியின் 1௦-வது குடியரசுத்தலைவராக 1999 முதல் 2006-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். இதுமட்டுமா? இத்தாலியின் மத்திய வங்கி ஆளுனராக பதவி வகித்தார். ஐரோப்பாவின் ஒற்றை நாணய முறையை அறிமுகப்படுத்தியதில் சியாம்பிக்கு முக்கிய பங்குண்டு.


இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சியாம்பி நேற்று காலமானார். இதுகுறித்து இத்தாலி பிரதமர் மட்டோ ரென்சி தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் ''இத்தாலி நாட்டின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர்'' என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார். 


Find out more: