சென்னை:
என்னப்பா... இப்படி பண்ணுறீங்களேப்பா... என்று மொட்டை ராஜேந்திரன் புலம்பி வருகிறார். என்ன விஷயம் என்றால்...


தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வருகிறார் மொட்டை ராஜேந்திரன். கொடூர வில்லனாக அறிமுகமான இவர் அப்படியே ரூட்டை மாற்றி காமெடி கலந்து கேரக்டர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார்.


வாரத்திற்கு 5 படங்கள் வெளியானால் அதில் 3 படத்தில் கண்டிப்பாக மொட்டை ராஜேந்திரன் இருப்பார் என்பது திட்ட வட்டம். இப்படி கோலிவுட்டில் வலுவாக இவர் காலூன்றி வரும் நிலையில் இவர் பெயரில் தொடர்ந்து டுவிட்டரில் போலி ஐடி மூலம் யாரோ ஒருவர் தவறான தகவல்களை பகிர்ந்து வந்துள்ளார். அவ்வளவுதான்... என்னப்பா.... இப்படி பண்ணுறீங்களேப்பா என்று களமிறங்கிய ராஜேந்திரன் இனியும் பொறுத்தால் அம்புட்டுதான் உள்ளதும் போய்விடும் என்று அந்த ஐடியை நீக்கி விட்டு போலீசிலும் புகார் செய்துள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: