'மருது' திரைப்படத்திற்கு பிறகு விஷால் தற்போது 'கத்தி சண்டை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூரஜ் இயக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும் வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.


இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியதால் விஷால், தனது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அவர் அடுத்து மிஸ்கின் இயக்கவுள்ள 'துப்பறிவாளன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். 


இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதன் பிறகு, இப்படம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளிவராது, இருந்த நிலையில், தற்போது இதன் படப்பிடிப்பு தொடங்கும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. 


வரும் செப்டம்பர் 12-ந்தேதி, இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங்க் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் அரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: