புதுடில்லி:
கோர்ட் உத்தரவால் தள்ளி வைக்கப்பட்ட ஸ்டிரைக் வரும் 29ம் நடக்கும் என்று தெளிவாக சொல்லியிருக்காங்க வங்கி ஊழியர்கள்.


வங்கிகள் தனியார்மயமாக்கல் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்கும் முயற்சியை எதிர்ப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12, இன்று 13 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய ஸ்டிரைக்கில் ஈடுபட அகில இந்திய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது.


ஆனால் ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட், வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலை நிறுத்தத்திற்கு தற்காலிக தடை விதிக்க, ஸ்டிரைக் தள்ளிவைக்கப்பட்டது.


இந்நிலையில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர் நிருபர்களிடம் பேசிய ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம், வரும் 29-ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவர். 


9 ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Find out more: