சென்னை:
பார்த்தார்... ரசித்தார்... மறந்தார் என்று கோலிவுட் கோகிலாக்கா சுவாரசியமான செய்தி ஒன்றை சொல்லியிருக்காங்க...


தோனி தன் வாழ்க்கை மையமாக வைத்து எடுத்த படத்தின்  ப்ரோமோஷனுக்காக சென்னை வந்தார். வந்தவர் தனக்கு பிடித்தமான நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்க்காமல் இருப்பாரா? பார்த்தார். ரசித்தார்... மகிழ்ந்தார்.


ரஜினியை பார்த்த தோனி கொஞ்ச நேரம் தடுமாற்றத்திலேயே இருந்தார். எப்படி தெரியுங்களா? படம் எப்போது ரிலீஸ் என்று ரஜினி கேட்க அடுத்த வாரம் என்று தோனி பதில் அளித்தார். ‘அடுத்த வாரமா?... செப்டம்பர் 30ம் தேதியா’ என ஆர்வமுடன் ரஜினி கேட்டறிந்தார்.


அருகில் தோனியாக நடிக்கும் சுஷாந்த் அமர்ந்திருந்தாலும், ரஜினிக்கு அவர் யார் என்று தெரியவில்லை. யார் உங்கள் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்று கேட்க, அப்போது தான் சுஷாந்த் பற்றி ரஜினியே தெரிந்துக்கொண்டார். சுஷாந்தை ரஜினிக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதையே தோனி மறந்து போய்விட்டார் என்றால் பாருங்க...



Find out more: