நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திரைப்படம் அனைத்து தரப்பினரையும் திரையரங்கை நோக்கி இழுத்திருக்கிறது.உலக சினிமா விமர்சகர்கள் இவர்கள் அனைவரின் முகத்திலும் கரியைப் பூசி, ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற மகுடமும் பெருமையையும் பாகுபலி 2 பெற்றிருக்கிறது.

தான் தமிழ் சினிமாவிலும் நூறு கோடி சாத்தியம் என ரஜினி நிருபித்துக் காட்டினார். இப்பொது ஆறு ஏழு படங்கள் நூறு கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. எந்த ஒரு விஷயத்தையும் சாத்தியம் என எடுத்துரைக்க முதலில் ஒருவர் முன்னோடியாக தேவைப்படுகிறார். அப்படி ஒரு முன்னோடிதான் பாகுபலி. ஒரு பிராந்திய மொழிப் படம் இவ்வளவுதான் வசூல் செய்யமுடியும் என்ற கட்டுப்பாட்டை தகர்த்தெரிந்து ஆயிரம் கோடி என்ற புது சாத்தியக்கூறை காண்பித்திருக்கிறது.

இது ஒரு மாபெரும் சாதனை.அது மட்டுமில்லாமல் தியேட்டரில் சென்று தான் பார்க்க வேண்டும் என்று மக்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel