'கைதி நம்பர் 150' படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் கெட்ட குத்து ஆட்டம் போட்ட ராய் லக்ஷ்மி அடுத்து பாலிவுட் பக்கம் நைஸாக பயணித்தார். 'ஜூலி 2' படத்தின் மூலம் இப்போ பாலிவுட்டில் அறிமுகமாகும் ராய் லக்ஷ்மி தனது முதல் படத்திலேயே மொத்த பாலிவுட் திரையுலகைத் தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் அதிரடியாக இறங்கியிருக்கிறார்.

அதற்காகவே 'ஜூலி 2' படத்தில் கவர்ச்சியில் லெவலைத் தாண்டி எக்ஸ்ட்ரா லார்ஜ் தாராளம் காட்டியுள்ளார். இந்தப் படத்தை பாலிவுட் ரசிகர்கள் தாண்டிப் நம்ம தமிழர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ராய் லக்ஷ்மி படு கவர்ச்சியாக நடிக்கும் 'ஜூலி 2' படத்திற்கு கத்தரி எதுவுமின்றி எஸ்கேப்பாக சென்சார் போர்டில் 'A' சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தின் விநியோகஸ்தர் பஹ்லஜ் நிகலனி இவர் முன்னாள் சென்சார் போர்டு தலைவர் ஆவார்.

அக்டோபர் 6-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் சூடான ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதில் லக்ஷ்மி ராயைப் பார்த்தே ரசிகர்கள் பலர் படத்தின் ரிலீஸ் தேதியை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
click and follow Indiaherald WhatsApp channel