நடிகை அதிதி ராவ் ஹைதரி தெலுங்கு பெண் என்றாலும் பாலிவுட்டில் தான் பிரபலம் ஆனார். மென்மையான, நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் என்றாலும் சரி டூ பீஸ் பிகினி மட்டுமே அணிந்த படி அதிரடி கவர்ச்சி ஆட்டம் என்றாலும் சரி ஒரு கலக்கு கலக்குவார் அதிதி.



சென்ற ஆண்டு மணிரத்னத்தால் காற்று வெளியிட படத்தின் மூலமாக மீண்டும் தமிழுக்கு வந்தவர் இந்த ஆண்டு செக்க சிவந்த வானம் படத்தில் நடித்தார். அடுத்ததாக தனுஷின் இரண்டாவது இயக்கத்திலும் மிஷ்கினின் சைக்கோ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தேர்ந்த பாடகியான அதிதி தமிழில் பாடகியாக அறிமுகம் ஆகவுள்ளார்.



ஜிவி பிரகாஷ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கும் ஜெயில் படத்தில் பிரகாஷோடு இனைந்து காத்தோடு என்ற டூயட் பாடலை பாடி அதிதி தமிழில் பாடகியாக அறிமுகம் ஆகிறார்.  


మరింత సమాచారం తెలుసుకోండి: