ஆந்திரா:
முதல்வர்ங்கிறதே பெரிய விஷயம்... அதுலேயும் கோடீஸ்வர முதல்வர்... அதிலும் 1ம் இடம் என்றால்... அட உண்மைதாங்க... செய்தியை பாருங்க புரியும்.


இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியலை அசோசியேஷன் ஆப் டெமாகிரடிக் ரீபார்ம் நிறுவனமும், தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் இணைந்து வெளியிட இதில்தான் சந்திரபாபு நாயுடு முதலிடம் பிடித்துள்ளார்.


 இவரோட சொத்து மதிப்பு ரூ.134 கோடியே 80 லட்சத்து 11 ஆயிரத்து 728... (அடேங்கப்பா... மூச்சு வாங்குதப்பா). இது தேர்தலின் போது கொடுக்கப்பட்ட சொத்து மதிப்பை வைச்சு எடுக்கப்பட்ட பட்டியல். இப்போ இன்னும் கூடியிருக்கலாம். 



మరింత సమాచారం తెలుసుకోండి: