ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளின் வெடிகுண்டு தாக்குதலுக்கு ரிசர்வ் படை வீரர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட ரிசர்வ் படையினர், போலீசாருடன் இணைந்து பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அகபேடா கிராமத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.


இதில் கலெக்டர் மற்றும் எஸ்.பி., இருவரும் கலந்து கொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். இதற்கு பாதுகாப்பு கொடுக்க மாவட்ட ரிசர்வ் படை வீரர்கள் ரோந்து சுற்றி வந்தனர். 


காரெல் பள்ளத்தாக்கை கடந்தபோது அங்கு மாவோயிஸ்ட்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்தது. இத்தாக்குதலில் ரிசர்வ் படை வீரர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 2 வீரர்கள் காயமடைந்தனர்.


மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை மாவோயிஸ்ட்டுகள் வெறுப்பதே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: