மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இப்பொழுது தமிழகம் இணைந்துள்ளதால் யாருக்கெல்லாம் ரேஷன் பொருள்கள் கடைகளில் வழங்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இப்போது இணைந்துவிட்டது என்பதற்கான அரசாணையை தமிழக அரசு முன்தினம் வெளியிட்டது.

இந்த திட்டத்தின் கீழ் யார் யாருக்கு யாருக்கு ரேஷன் பொருள்கள் கிடைக்கும் என்கிற சில விதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. அந்தியோஜனா அன்னயோஜனா திட்டம், அன்னபூர்ணா ஆகிய திட்டங்களின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு மட்டுமே ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கும், மாற்றுத் திறனாளியை தங்கள் குடும்பத் தலைவராக கொண்டவர்களுக்கும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும். குடிசைவாசிகள், குப்பை சேகரிப்பாளர்கள், வீடில்லாதவர்கள் ஆகியோரும் இந்த ரேஷன் பொருள்கள் வாங்க தகுதியானவர்களாவர். விவசாய தொழிலாளர்களும் கூட ரேஷன் பொருள்களை பெறலாம்.
click and follow Indiaherald WhatsApp channel