ரியோடிஜெனிரோ:
கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக் திருவிழாவிழாவில் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டியின் நடந்து வரும் மரக்கானா மைதானத்தில் ஐ.நா., பொது செயலாளர் பான்கி மூன், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் உட்பட பலநாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தென் அமெரிக்காவின் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் கண்காட்சி நடந்தது. ஒலிம்பிக் கமிட்டியில் இந்திய உறுப்பினர் நீடா அம்பானி கலந்து கொண்டார். இந்திய அணி சார்பில் துப்பாக்கி சுடும் பிரிவை சேர்ந்த வீரர் அபினவ் பிந்த்ரா தேசியக்கொடியை ஏற்றி வந்தார்.
கோலாகலமாக தொடங்கிய இந்த விழாவில் கண்கவர் நிகழ்ச்சிகள் நடந்தது.