ரியோ டி ஜெனிரோ:
இந்தியா வீரர்கள் பல போட்டிகளில் சொதப்பி வந்தாலும் சிலர் நம்பிக்கை ஊட்டி வருகின்றனர். இது ஒலிம்பிக் போட்டி செய்திதாங்க.
ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை பொம்பைலா தேவி பங்கேற்ற வில்வித்தை தகுதிச் சுற்று போட்டி நடந்தது. இதில் ஆஸ்திரிய வீராங்கனை பால்டெப்பை 6 - 2 என்ற கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் பொம்பைலா தேவி.
இதையடுத்து நடந்த இரண்டாவது சுற்றில் தைவான் வீராங்கனை லின் ஷின் சியாவை தோற்கடித்தார் பொம்பைலா தேவி. இதன் மூலம் காலியிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அவர் முன்னேறி இந்திய ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்துள்ளார். யாராவது ஒரு பதக்கமாவது வாங்குங்க...