மாஸ்கோ:
தரம் குறைந்து பாதிப்பு உங்களுக்குதான் என்று வேதனை தெரிவித்துள்ளார்... தெரிவித்துள்ளார். யார் என்று கேட்கிறீர்களா? 


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்தான். ஏன்? அப்படி சொல்லியிருக்கிறார் என்று தெரியுங்களா? ஊக்க மருந்து விவகாரத்தால் 100-க்கும் அதிகமான ரஷ்ய வீரர், வீராங்கனைகள் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதுதான் இதற்கு காரணம்.


இதனால் தடகள வீரர், வீராங்கனைகள் தான் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளானார்கள். போல்வால்ட் சாதனை மங்கை இசின்பேஎவா, செர்ஜி கபென்கோவா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இதில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தடகளத்தை பொறுத்தவரை ஒரே ஒரு ரஷ்யர் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்க சர்வதேச தடகள சம்மேளனம் அனுமதி அளித்து உள்ளது. நீளம் தாண்டும் வீராங்கனை டாரியா கிறிஸ்னா மட்டுமே பங்கேற்கிறார்.


இதற்குதான் கொதித்துள்ளார் ரஷ்யா நாட்டு அதிபர் விளாடிமிர் புடின். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ஒலிம்பிக்கில் பல்வேறு வகையான விளையாட்டுகளில் ரஷ்யர்கள் பங்கேற்க இயலாத நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். இதனால் ஒலிம்பிக் போட்டியின் தரம் குறைந்து பாதிக்கும் என்று பொங்கி தீர்த்துள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: