தற்போது மழைக்காலம் என்பதால், எல்லோருக்கும் சளி வருவது உண்டு. சளித்தொல்லை யாரையும் விட்டு வைப்பது இல்லை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும், இதில் பாதிப்படைகின்றனர். 


இதில் இருந்து விடுபட, சில இயற்கை மருத்துவம் பயன்படுகிறது. அதை பற்றி இப்போது நாம் பார்க்கலாம். 


1. கற்பூரவள்ளி இலையை, ஒரு தவாவில் வதக்கி, சாறு பிழிந்து குடித்தால் சளி தொல்லை நீங்கும்.


2. இரவு படுக்கும் முன்பு, 1 கிளாஸ் பாலில், தேவையான அளவு சர்க்கரை, ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் மிளகு தூள் சேர்த்து குடித்து வந்தால், சளி நீங்கும். 


3. தூதுவிளை கீரையை, துவையல் செய்து, மதிய உணவில் சாப்பிட்டால், சளி தொல்லை நீங்கும்.


4. 1 டம்ளர் குடி தண்ணீரில், 1 ஸ்பூன் மிளகு தூள் மற்றும் வெல்லம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, ஆரிய பின்பு வடிகட்டி குடித்தால் சளி குறையும். 


మరింత సమాచారం తెలుసుకోండి: