அசாம்:
அசாம் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய 1000 கி.மீ. தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட யானை சிகிச்சை பலனின்றி இறந்ததால் மக்கள் சோகமடைந்துள்ளனர். 


அசாம் மாநிலத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் பிரம்மபுத்ரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது இந்த வெள்ளத்தில் ஒரு பெண் யானை அடித்து செல்லப்பட்டு சுமார் 1000 கி.மீட்டருக்கு அப்பால் ஜமால்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் போய் ஒதுங்கியது.


மிகுந்த சிரமத்திற்கு இடையில் அந்த யானையை கிராம மக்கள் மீட்டனர். சோர்ந்து போய் கிடந்த அந்த யானை மயக்க நிலைக்கு சென்றது. பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் யானை பரிதாபமாக இறந்தது. இது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: