திருநெல்வேலி:
வயது என்னவோ... 12 தான்... ஆனால் இன்று இந்த சிறுவனால் பலர் உயிர் பிழைத்துள்ளனர். எப்படி தெரியுங்களா?


அந்த கண்ணீர் வரவழைக்கும் சம்பவத்தை பற்றி பார்ப்போம். நாகர்கோவில் கோட்டாறு வாகையடி தெருவை சேர்ந்தவர் சுவாமிநாதன். ஜவுளிக்கடை ஊழியர். இவரது மனைவி லதா. தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ். இவர்களின் மகன் அவினாஷ் (12). நன்றாக சென்றுக் கொண்டிருந்த இவர்களது வாழ்வில் விபத்து என்ற எமன் புகுந்தான். 


ஏழாம் வகுப்பு படித்து வந்த அவினாஷ் கடந்த 18ம் தேதி மாலை டியூஷன் செல்ல சைக்கிளில் புறப்பட்டான். அப்போது அந்த சிறுவனுக்கு எமனாக வந்து சேர்ந்தது ஒரு பைக். அந்த பைக் மோதியதால் தூக்கிவீசப்பட்ட அவினாஷ் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். ஆனால் அவனுக்கு சில நாட்கள் கடந்த நிலையிலும் நினைவு திரும்பவில்லை. சிறுவன் மூளைச்சாவு அடைந்தான்.


பெற்றவர்கள் கலங்கி நிற்க... சிறுவன் ஆஸ்பத்திரி படுக்கையில் அமைதியா கிடந்தான். கடந்த 23ம் தேதி அவினாஷ், மீண்டும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் அவனது உடல் உறுப்புகளை தானமாக தர பெற்றோர் முன்வந்தனர். இதையடுத்து அவினாஷ் நெல்லை ஜங்ஷனில் உள்ள கிட்னிகேர் சென்டர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டான். அங்கு அவனது இதயம், கண்கள், கிட்னி, கல்லீரல் ஆகியவை அகற்றப்பட்டு தேவையான நோயாளிகளுக்கு அனுப்பப்பட்டது.


இதனால் இதயம் கொடுத்து ஒருவரையும், கண்கள் கொடுத்து 2 பேரையும், கிட்னிகள் கொடுத்து 2 பேரையும், கல்லீரல் வாயிலாக ஒருவரையும் என அவினாஷ் வாழ வைத்துள்ளான்.


கண்கள் கலங்க அவனது பெற்றோர் இந்த தானத்தை கொடுத்துள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: