சென்னை:
விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்தை ஜெட் வேகத்தில் பிடித்து விட்டார் சிவகார்த்திகேயன் என்றுதான் சொல்லணும்.. என்ன காரணம் தெரியுங்களா?


இதோ சொல்லிடுவோம்... கோலிவுட்டில் பேஸ்மட்டத்தை ஸ்டாராங்காக போட்டப்படி வந்த சிவகார்த்திகேயன் தற்போது பில்டிங்கையும் ஸ்டாராங்காக்கிட்டார். அதுவும் ஜெட் வேகத்தில் என்றுதான் சொல்லணும்.


இவர் நடிப்பில் விரைவில் வெளி வர இருக்குது ரெமோ படம்.


இந்த படத்தின் வியாபாரம்தான் இவரை விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்தில் கொண்டு வந்து இறக்கி விட்டு இருக்கு.


இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த படங்களை விட பல மடங்கு அதிக விலைக்கு படம் விற்றுள்ளதாம். கிட்டத்தட்ட ரூ.36 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது.


ஓவர்சீஸ் என எல்லாவற்றையும் சேர்த்தால் ரூ.40 கோடி வரும் என்று கூறப்படுகிறது.


அப்போ... விஜய், அஜித் அடுத்த இடம் தானே... அப்ப ஓப்பனிங் கிங் இடத்திற்கு முட்டி மோதறார் என்று சொல்லலாம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: