சென்னை:
புதிய படத்திற்கு அச்சாரம் போட்டுள்ளார் சில ஆண்டுகளுக்கு பிறகு என்று கோலிவுட் கோகிலாக்கா தெரிவித்துள்ளார்.


என்ன விஷயம்ன்னா! நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என்று பல தளத்தில் பயணம் செய்யும் ஜே.கே.ரித்தீஷ் "தப்பாட்டம்" என்ற பெயரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறாராம். அதைதான் கோலிவுட் கோகிலாக்கா தெரிவிச்சு இருக்காங்க...


தப்பாட்ட கலைஞனும், ஒப்பாரி வைக்கும் பெண்ணிற்கும் இடையே காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிகிறது. மகிழ்ச்சியாக செல்லும் இவர்களின் வாழ்க்கையில் விழும் இடையூறு என்ன? அதை அந்த தம்பதிகள் எப்படி கடந்து வந்தனர் என்பதுதான் கதையாம்... 


இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட மும்முரமாக வேலைகள் நடந்து வருகிறது என்று சொல்லியிருக்காங்க...



మరింత సమాచారం తెలుసుకోండి: