சென்னை கத்திப்பாரா பாலத்துக்கு சங்கிலிப் பூட்டு போடும் போராட்டத்தை நடத்தியதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினாலும், மின்னல் வேகத்தில் ஒன்று கூடி போலீஸாரையே வியக்கும் திகைப்பில் ஆழ்த்தி விட்டனர் இளைஞர்கள்.வறட்சி நிவாரணம் அதிகரித்து வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளுக்காக டெல்லியில் தமிழக விவசாயிகள் ஒரு மாதமாக போராடி வருகின்றனர்.
எனினும் மத்திய அரசு அதை ஒரு துளி பொருட்டாக கூட மதிக்கவில்லை. சமாதான பேச்சுவார்த்தைக்கும் அவர்கள் உடன்படவில்லை.

அதனால் அதிரடியாக இந்த போரட்டத்தை நடத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.இவ்வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பணி நிமித்தமாகவும், பள்ளி,கல்லூரிகளுக்கு, புறநகர் பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.இந்தப் போராட்டத்தால் மிகுந்த்த போக்குவரத்து நேரிசல் உண்டனது,போலிசார் அதிரடியாக அவர்களை தூக்கி போராட்டத்தை முடித்தனர்.
click and follow Indiaherald WhatsApp channel