சென்னை:
சிலரின் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் இருமுகன்... வசூலில் பல முகமாக அள்ளி வருவதால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


விக்ரம் நடித்த இருமுகன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. முதலில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் கிங் என்று நிரூபித்துவிட்டார் விக்ரம். வெளியான 2 நாட்களிலேயே தமிழகத்தில் மட்டும் ரூ.10 கோடி வரை இந்த படம் அள்ளிவிட்டது என்பதுதான் உண்மை. 


இங்கு மட்டுமா... ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் இப்படம் செம்ம்ம்மமம வசூலாம். முதல் நாள்ரூ  4.75 கோடி வசூல் செய்ய, இரண்டாவது நாள் ரூ 3.25 என 2 நாட்களில் ரூ.8 கோடி வசூல் என்றால் பார்த்துக்கொள்ளுங்க... படம் நல்ல லாபம் வருவதாக கூறி தெலுங்கு விநியோகஸ்தர் ஒருவர் இருமுகன் தயாரிப்பாளர் சிபுவை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லியிருக்காருங்க...



మరింత సమాచారం తెలుసుకోండి: