சென்னை:
தலைப்பிலேயே படத்தை பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டார் இவர் என்றுதான் சொல்ல வேண்டும்.
என்ன விஷயம் என்றால்... காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’ என்ற படம் உருவாக உள்ளதாம். தலைப்பிலேயே படத்தை பேச வைப்பது இவருக்கு கைவந்த கலை என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன் தற்போது ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
இந்த படங்களை தொடர்ந்து தற்போது ‘கடைசி விவசாயி’ என்ற புதிய படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். சமுதாய அக்கறையோடு உருவாக இருக்கும் இப்படத்தில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு காமெடி, காதல் என பல சிறப்பம்சங்களையும் சேர்த்து உருவாக்க உள்ளாராம். இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பக்கூடியதாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.