லக்னோ:
அவர்தான்... அவர்தான்... "ராணி லட்சுமி பாய்தான்" என்று மாநிலமே கொண்டாடுகிறது. ஆமாங்க... ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்று கொடுத்த சாக்சிக்குதான் இந்த விருது கொடுக்க போறாங்க...


ரியோவில் பதக்கம் வென்ற சாக்சிக்கு உத்தர பிரதேச மாநில அரசின் ‘ராணி லட்சுமி ராய்’ விருது வழங்கப்படும் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.


ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெண்கல பதக்கத்தை மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் பெற்றுக் கொடுத்தார். இதையடுத்து அவரை இந்தியா முழுவதும் கொண்டாடி வருகின்றனர். 


சொந்த மாநிலமான ஹரியானா அவருக்கு 2.5 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. அதுமட்டுமா... இதே பிடி அரசு வேலை என்று கொடுத்துள்ளது. இப்போது உத்தர பிரதேசம் மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், சாக்சிக்கு ‘ராணி லட்சுமி பாய்’ விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.


‘ராணி லட்சுமி பாய்’ விருது தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் வீரர்களுக்கு உத்தர பிரதேச அரசு சார்பில் வழங்கப்படும். ‘ராணி லட்சுமி பாய்’ படம் பொறித்த வெண்கல விருதுடன் 3.11 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படும். இனி சாக்சி ராணி லட்சுமி பாய் என்று உத்தரபிரதேசமே கொண்டாடும்...


మరింత సమాచారం తెలుసుకోండి: